Pages


Thursday, March 10, 2011

ஆன்மீகம் - கேள்வி பதில்


 

தேடல் மட்டும் தான் வாழ்க்கையை ருசியாக வைத்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய ஆன்மீக கேள்விகளுக்கு நான் தேடி கண்டறிந்த பதில்கள் இவை.

இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்? 

மதம் என்பது மனித நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. இதை புரிந்து கொண்ட முன்னோர்கள் தங்களின் சந்ததியினருக்கு வாழும் முறைப் பற்றி சொல்லவும், உயிர்களை காக்கவும் பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைத்தனர். இந்த கதாபாத்திரங்களின் குணநலன்கள் மூலம் மக்களுக்கு நல்லதை எடுத்து சொன்னார்கள். (மிக மிக சுருக்கமாக சொன்னால் பாட்டி சொல்லும் நல்வழி கதைகள்) . எந்த ஒரு பொருளும் முழுக்க முழுக்க கற்பனையினால் உருவாக்கி விட முடியாது எனவே மனித ரூபத்தில் சில மாற்றங்களை செய்து கடவுள் எனவும் அந்த கடவுள்களுக்கு தங்களுடன் வாழ்ந்த மனிதர்களின் குணநலத்தை மிகப் படுத்தியும் வடிவமைத்தனர். இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் ஏகப்பட்ட கடவுள்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் புகழ் உச்சியிலிருத கிரேக்க மதத்தில் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பதை போன்றே குடும்ப கட்டமைப்புடன் காணப்பட்டன. கிறித்து மதத்தினை பொருத்த மட்டும் ஏசுவும், அவரது அன்னையும் கடவுளாக குறிப்பிடபட்டாலும் போப் முதல் பாதிரியார் வரை கடவுளாக மதிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமிய மதத்திலும் அல்லா முதல் கடவுள். அவருடைய வழியை உலகிற்கு சொன்ன தூதர்கள் நபிகள் பெருமான் வரை கடவுளாக மதிக்கப்படுகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தனை தெய்வங்கள் இருந்தும் அதென்ன குலதெய்வம்? 

கடவுள்களின் தோற்றம் பற்றி நான் முன்பே கூறிவிட்டேன். குலதெய்வமும் அப்படிதான். ஆனால் குலதெய்வங்கள் உண்மையாலும் வாழ்ந்த மனிதர்கள். தங்களுடைய இன மக்களை காப்பாற்றுவதற்காக இறந்து போன முன்னோர்களையும், அதிசய குணம் கொண்டவர்களையும் மறக்காமல் இருப்பதற்காக மக்கள் ஏற்படுத்திக் கொண்ட வழிபாட்டு முறை குலதெய்வ வழிபாடு. பாப்பாத்தி, ராசாத்தி, வெள்ளையம்மா, பெரியண்ணன், கருப்பு, வீரபத்திரன் இப்படி ஒவ்வொரு குலதெய்வத்தின் பின்னாலும் ஒரு நெஞ்சம் நெகிழ்கின்ற உண்மை சம்பவமும் மனித வாழ்க்கையும் இருக்கிறது. இதுபற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்? 

விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன என்பதை நினைவில் கொள்க.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடவுளை நினைக்க கூடாது என சொல்லுகின்றார்களே? 

இந்த கேள்வியே மிகவும் அபத்தமானது. இறையை நினைக்க கால நிர்ணயம் செய்ய இவர்கள் யார். இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் தீட்டு என கூறி சாமி அறைக்குள் செல்வதில்லை. இதற்கு முதல் காரணம் அறிவியல் தான். பெண்ணின் மாதவிடாய் காலங்களில் நடக்கும் உதிர போக்கு காரணமாக அவர்கள் உடல் சக்தியிழந்து காணப்படும். இந்த நேரத்தில் பூஜை செய்ய கூட்டி மொழுகி (அந்த காலத்தில்) அவர்கள் வேலை செய்தால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுவிடும். எனவே முன்னோர்கள் பெண்களை மாதவிடாய் காலங்களில் அதிக வேலை செய்ய அனுமதிப்பதில்லை. இதை தவறாக புரிந்து கொண்டவர்கள், பெண்களை கடவுளை நினைக்கவும் தடை செய்வது மிகவும் கேவலமான செயல். அவர்கள் இன்னும் இந்து மத கோட்பாடுகளை புரிந்து கொள்ளவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல் முறையில் நிறைய சடங்குகள் இருந்தாலும் தலையில் தேங்காய் உடைப்பது போன்ற மூடநம்பிக்கைகளும் காணப்படுகின்றனவே? 

ஆம். இது எல்லா மதங்களுக்கும் உண்டான பிரட்சனை. இஸ்லாமியர்களின் குர்பானிதான் இந்து மதத்தின் பலி கொடுத்தல். உயிர் வதை என்பதை தடுக்க சட்டங்கள் வந்தாலும் இதை தடுக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வேதனை. சில இடங்களில் இவ்வாறான மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. இதனை சரி செய்ய முதலில் எதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்பதை வரையரை செய்ய வேண்டும். பிறகு இதனுடைய விளைவுகளை எடுத்து கூறி நாம் அவற்றை அழிக்க வேண்டும். பால்ய திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்றவையெல்லாம் விழிப்புணர்வு எற்படுத்தி நாம் அழித்து விட்டோம் என்பதை நினைவில் கொள்க.

வாஸ்து படி வீடுகட்டினால் சுபிட்சம் என்கின்றார்களே? 

முதலில் வாஸ்து என்பது என்னவென அறிய வேண்டும். எல்லா இடங்களிலும் நில அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலை பிரதேசங்களில் ஒரு அமைப்பு, பாலைவனங்களில் ஒரு அமைப்பு, கலர் நிலங்களில் ஒரு அமைப்பு என காணப்படுகின்றன. இதனை கணக்கில் கொண்டும் வீட்டில் சூரிய வெளிச்சம் பரவ ஏற்றவாரும் எப்படி வீட்டை அமைப்பது என சொல்வது வாஸ்து. இப்போது வியாபாரமாகிவிட்டதால் பலரும் தவறு செய்கின்றார்கள்.

நட்ச்திரம், ராசி , ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா? 

உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது உழைப்பு மட்டும் தான். கல்லை நம்புவதோ, ஜாதகத்தினை நம்புவதோ உயர்விற்கு பலன் தராது. ஜாதகம் என்பது ஒரு கணக்கீடு, வெகு சிலர் மட்டுமே அந்த கணக்கீட்டில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றார்கள்.(உலக புகழ் பெற்ற நாஷ்டோடாமஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிரீர்களா) புதிய கோள்கள் கண்டறியப்பட்டும் கூட பழைய முறையை இன்னும் ஜாதகம் பார்ப்பவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் முறையான கணக்கீட்டை அவர்களால் கணித்து கூறுவது கடினம். பெயரை மாற்றுவது, வீட்டை மாற்றுவது, வாகண எண்ணை மாற்றுவது என செய்யாமல் உங்களுடைய கவணத்தினை தொழில் பக்கம் மாற்றினாலே வெற்றி கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment